இந்திய -சீன எல்லைப்பகுதியானடோக்லமில் மீண்டும் சீனா சத்தமில்லாமல் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
டோக்லம் பீடபூமியில் இந்தியாவும், சீனாவும் படைக் குவிப்பில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. பின்னர் இருநாடுகளும் படைகளைத் திரும்பப் பெற்றன. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில், இதுதொடர்பாக நடந்த விவாதத்தின் போது பேசிய உறுப்பினர் அன் வேக்னர் ((Ann Wagner))
டோக்லமில் மீண்டும் படைக்குவிப்பில் சீனா ஈடுபட்டு வரும் நிலையில் இந்தியாவோ, பூடானோ நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதாக குற்றம்சாட்டினார்.
சீனாவின் இந்த நடவடிக்கையானது, தென் சீனக் கடல் கொள்கையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.