முக்கிய செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு..


தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது.

இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.22 உயர்ந்து, ரூ.2,739 ஆகவும், சவரனுக்கு ரூ.176 உயர்ந்து, ரூ.21,912-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை, சவரனுக்கு, ரூ.192 அதிகரித்துள்ளது. சென்னையில், 24 கேரட் மதிப்புடைய ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.24 அதிகரித்து, ரூ.2,988 ஆகவும், சவரனுக்கு ரூ.23,904க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையை பொருத்தவரை எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.41.20 காசுகளுக்கும், கிலோ ரூ.41,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.