முக்கிய செய்திகள்

தனிக்கட்சி பற்றி நாளை முடிவு: புதுவையில் தினகரன் பேட்டி

 


ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார்.

அங்கு அவரிடம் நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அப்போது தினகரன் கூறியதாவது:-

நான் தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக நாளை முடிவு செய்யப்படும். நாளை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் ஆகும். எனவே எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நாளை தனிக்கட்சி தொடங்குவது பற்றி முடிவு செய்வேன்.

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.