அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும்,சென்னையில் மாலை வேளைகளில் விட்டுவிட்டு இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும். காற்றழுத்த தாழ்வு நிலை, தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழகம் & தெற்கு ஆந்திரக்கரை வரை நிலவி வருகிறது எனத் தெரிவித்துள்ளது
