தமிழகம் முழுவதும் பேருந்துக் கட்டணத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மறியல்!

தமிழகம் முழுவதும் பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன. திமுகவுடன், காங்கிரஸ், மதிமு, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் இறங்கி உள்ளன.

திருச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 20ம் தேதி உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் நேற்று திடீரென குறைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் நடத்திய போராட்டம் காரணமாகவே குறைக்கப்பட்டது. அதுவும் சிறிதளவு மட்டுமே குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் மறியல் போராட்டமான நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மக்கள் பிரச்சனைக்காக அதிகப்படியான போராட்டங்களை நடத்திய கட்சி எது என்று பார்த்தால், அது கண்டிப்பாக திராவிட முன்னேற்ற கழகமாகத் தான் இருக்கும் என்று சொல்லமுடியும். அந்த வரிசையில் பேருந்து கட்டணத்தை முழுமையாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பாக தற்போது மறியல் போராட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை அன்று கட்டணத்தை குறைத்தாக வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து பேருந்து கட்டணமானது குறைக்கப்பட்டது. ஆனால் குறைக்கப்பட்ட கட்டணம் சொர்ப்ப அளவிலேயே காணப்பட்டது.

ஏற்கனவே பேருந்து கட்டணத்தை ஏறத்தாழ 100% அளவுற்கு உயர்த்திவிட்டு, 10% அளவுக்கு குறைக்கப்பட்டது எந்த அளவில் நியாயம் என்ற அடிப்படையில் இந்த மறியல் போராட்டமானது நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த பேருந்து கட்டணமானது தற்போது மிகப்பெரிய ஒரு சந்திப்பை ஏற்படுத்தும் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த மறியல் போராட்டமானது அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என எல்லா இடங்களிலும் நடக்கின்றன. தற்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த மறியல் போராட்டத்தில் திமுகவின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. இந்த மறியல் போராட்டமானது மிகப்பெரிய ஒரு பாதிப்பை பொதுமக்களிடையே ஏற்படுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டாலும், இதனுடைய எதிரொலிப்பு என்பது மக்களுடைய நலனுக்காகத் தான் இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் பேருந்து மறியலில் ஈடுபடும் போது நிச்சயமாக போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்படும். இந்த போக்குவரத்து ஸ்தம்பிப்பு என்பது நிச்சயமாக தமிழக அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக ஒலிக்கும்.

DMK And Alliance parties protoest against bus fare hike

சோடா பாட்டில் வீசத் தயார் என்பதா…: ஜீயரா ரவுடியா எனக் குவியும் கண்டனங்கள்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது!

Recent Posts