முக்கிய செய்திகள்

திமுக – தினகரன் நெருக்கம் அம்பலமானது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திமுக மற்றும் தினகரனுக்கு இடையே உள்ள நெருக்கும் தற்போது அம்பலமாகி இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

கட்சிவிரோத செயல்களில் ஈடுபட்ட 3 எம்எல்ஏக்கள் மீது அதிமுக கொறடா முறைப்படி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் சபாநாயகர்தான் முடிவெடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் எதிர்கட்சியான திமுக ஏன் தலையிடுகிறது என தெரியவில்லை.

அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை என்றால் ஸ்டாலின் ஏன் கொந்தளிக்கிறார்?

இதன் மூலம் திமுகவுக்கும் தினகரன் கட்சிக்கும் இடையிலான நெருக்கம் வெளிப்பட்டுள்ளதுய

இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும், தமிழகம் – புதுச்சேரி தேர்தல் நடைபெற்றுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்.

குடிநீர் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.