முக்கிய செய்திகள்

தி.மு.கவுடன் கூட்டணி தொடரும் : ம.தி.மு.க தீர்மானம்..

தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க தொடரும் என்று ம.தி.மு.க உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எழுப்புரிலுள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ‘ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்கவேண்டும்.

முத்தலாக் தடைச்சட்டத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பவேண்டும். திராவிட இயக்கத்தை காக்கவும், மாநில சுயாட்சிக்கு வலுவூட்டவும் வரும் காலங்களில் தி.மு.கவுடன் கூட்டணி தொடரும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.