முக்கிய செய்திகள்

தேர்தல் ஆணையத்திற்கு சவால் விடும் வலைப்பதிவு

வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் பதிவு

———————

வாங்க சார் ! என்ன வேணும் ?

.
ஃபிரிட்ஜ் வேணும்
.
என்ன ரேட்ல சார் வேணும் ?
.
12 ல இருந்து 15 ஆயிரத்தில்
.
இந்தா இருக்கு பாருங்க சார்
.
இதையே எடுத்துக்கிறேன்… ஆனா என்கிட்டே 1300 ரூபாய்தான் இருக்கு.
.
பரவாயில்ல சார்! இன்ஸ்டால் மெண்ட்ல கட்டலாம் சார். நீங்க என்ன வேலை பார்க்கிறிங்க?
.
இப்போதைக்கு வேலை இல்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன். ஆனா அடுத்த மாதம் ஃபுல்லா செட்டில் பண்ணிருவேன்.
.
என்ன சார் நீங்க! பணமும் இல்லை, வேலையும் இல்லை, உங்களை நம்பி எப்படி சார் கொடுக்கிறது.
.
சார் எங்க வீட்டில 6 பேர் இருக்கோம்.
நான் இருக்கிறது ஆர் கே நகர் தொகுதி.
.
என்னாது! ஆர் கே நகர் தொகுதியா! இதை வந்தவுடனே சொல்லக்கூடாதா சார்… முதல்ல உக்காருங்க சார்!
.
ஃபிரிட்ஜ் மட்டும் போதுமா… இல்லை
வேற ஏதாவது வேணுமா சார்
.
இப்போதைக்கு இது போதுங்க… அடுத்து பொது தேர்தல் வரும்போது…
.
ஓ கே சார்!
டேய் தம்பி… சாருக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வா
🙄😎😜
RK நகர் இடை தேர்தல்