முக்கிய செய்திகள்

தேர்தல் களத்தில் வலம் வரும் நட்சத்திர பேச்சாளர்கள் யார்?யார்?

தமிழகத்தில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலை ஒட்டி களத்தில் வலம் வரும் நட்சத்திர பேச்சாளர்கள் யார்… யார் என்ற பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன் படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அன்வர் ராஜா, வைத்திலிங்கம், விஜிலா சத்யானந்த், அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், உள்ளிட்ட 40 பேர் அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை பெற்றுள்ளனர்.

தி.மு.க.வில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி உள்பட 40 பேர் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திருப்பூர் துரைசாமி, மல்லை சத்யா உள்பட 20 பேர் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளனர்.