முக்கிய செய்திகள்

தேவர் குருபூஜை : தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110 வது ஜெயந்தி விழாவும் 55 வது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.