முக்கிய செய்திகள்

தேவர் குருபூஜை : மதுரை தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை..

அக்டோபர் 30-ந்தேதி அன்று பிறந்து அதே 30ந்தேதி மறைந்த தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராம -லிங்கத்தேவரின்  குருபூஜை விழா தென் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பசும் பொன் தேவர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அதுபோல் மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு காலை முதலே முதல்வர்,எதிர்கட்சித் தலைவர் என பல அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். பெண்கள் ஊர்வலமாக முளைபாரி எடுத்து  தேவர் சிலைக்கு வந்தனர்.