முக்கிய செய்திகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஜூலி..

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாவுள்ளார் ஜூலி.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலி. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். அதில் அவருடைய செயல்பாடுகள் அனைத்துமே பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியது. மேலும், பலரும் அவரை கடுமையாக சாடினார்கள்.
இந்நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரியத் தொடங்கியுள்ளார் ஜூலி. டான்ஸ் மாஸ்டர் கலா தயாரித்து வழங்கும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சி விரைவில் 6-வது சீசன் தொடங்க உள்ளது.
ஜூலியிடம் தனது நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளராக பணிபுரிய முடியுமா என்று கேட்டுள்ளார் டான்ஸ் மாஸ்டர் கலா. அதனைத் தொடர்ந்தே இந்நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகியுள்ளார் ஜூலி. இந்நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.