நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்?..

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு முடிவுக்கு வந்தால் மேலும் நோய்த் தொற்று தீவிரமாகும் என்ற நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும்,
இதனால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு, ஊரடங்கை நீட்டிப்பதற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா உறுதி: சுகாதாரத் துறை

தமிழகத்தில் இரும்பு, சிமெண்ட், உரம் உள்பட 13 வகையான ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி..

Recent Posts