முக்கிய செய்திகள்

நான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் தனித்தே போட்டியிடப்போவதாக அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

பல்வேறு கட்சிகளுடன் கமல் கூட்டணி அமைப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஆண்டவனுடனும், மக்களுடனும் மட்டுமே கூட்டணி என்று கூறி தேர்தல் களத்தில் குதித்த விஜயகாந்த் பாணியில் கமல் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக ஊடகங்கள் சிலாகித்து வருகின்றன. இந்நிலையில், தனியாக போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது எனத் தெரிந்தும், அந்த முடிவை கமல் எடுத்திருப்பதாக நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். “நான் தலைகீழாகத்தான் குதிப்பேன்” என்று கமல் அடம்பிடிப்பதாக மீம்ஸ் போட்டு, நெட்டிசன்கள் அலப்பறையைக் கொடுத்து வருகின்றனர். ஒருவேளை தன் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்புதான் என்ன என்பதை கணித்துப் பார்த்து தெரிந்து கொள்வதற்கான தேர்தலாக ஒரு வேளை கமல் இதைக் கருதி இருக்கலாம். நெட்டிசன்கள் அதையும் யோசிக்கலாம் தானே…