முக்கிய செய்திகள்

“நான் படத்தில் நடிக்கவில்லை”: திவ்யா சத்யராஜ் மறுப்பு

‘நான் படத்தில் நடிப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை’ என திவ்யா சத்யராஜ் மறுத்துள்ளார்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து நிபுணராக இவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்று செய்தி வெளியானது. ‘கள்ளப்படம்’ என்ற படத்தை இயக்கிய வடிவேல் தான் இந்தப் படத்தை இயக்குகிறார் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், இந்தச் செய்தியை மறுத்துள்ளார் திவ்யா சத்யராஜ். “நான் படத்தில் நடிப்பதாக வெளியான செய்தி உண்மை கிடையாது. என்னுடைய க்ளினிக் பணிகளை முடிக்கவே இரவு 9 மணி ஆகிவிடுகிறது. வடிவேல் எங்களுடைய குடும்ப நண்பர். அப்பாவை வைத்துத்தான் அவர் படம் இயக்கத் திட்டமிட்டு வருகிறார். நாங்கள் இந்தப் படத்தைத் தயாரிப்பதாக வெளியான செய்தியும் உண்மை கிடையாது” எனத் தெரிவித்துள்ளார் திவ்யா சத்யராஜ்.