முக்கிய செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை : நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி மரியாதை..

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111 வது பிறந்த தினம் இன்று குருபூஜையாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நாளை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது.

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்

முன்னதாக இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வரும், துணை முதல்வரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.