மத்திய அரசால் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மனிதால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பேரழிவு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விடவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோசமானது என்று விமர்சித்தார்.
