ஹபீஸ் சயீத் தலைமை வகிக்கும் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை தடைசெய்யும் அவசரச் சட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.
2008ஆம் மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். பாகிஸ்தானைச் சேர்ந்த இவர் ஐநா சபையால் சர்வதேச பயங்கரவாதக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஹபீசை கைது செய்து தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஐ.நா., சபையால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யும் அவசரச் சட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இந்தச் சட்டம் நிறைவேறும் பட்சத்தில் ஹபீஸ் சயீத் மற்றும் ஜமாத் உத் தவா, லஷ்கர் இ தொய்பா ஆகிய அமைப்புகளும் பாகிஸ்தானில் இயங்க தடை விதிக்கப்படும். அவர்களது அலுவலகம், வங்கி கணக்கு ஆகியவையும் முடக்கப்படும்.