முக்கிய செய்திகள்

பள்ளிப் பாடத்திட்டத்தில் அரசியல் சட்டம்: அமைச்சர் செங்கோட்டையன்

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சங்களை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் இன்று தெரிவித்தார். பள்ளி மாணவர்கள் அரசியல் சட்டம் குறித்து பள்ளிப் பருவத்திலேயே அறிந்து கொள்ள கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று  பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் 6 முதல் 12ம் வகுப்பு முடிய உள்ள பாடத்திட்டங்களில் அரசியல் சட்ட அம்சங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்கிற எண்ணத்துடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் தொகுதிகளிலும் அரசு வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.