முக்கிய செய்திகள்

பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்; 4 இந்திய வீரர்கள் மரணம்..


காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நுழைந்து, நடத்திய தாக்குதலில், 4 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் கிரமத்தில் சர்வதேச எல்லை பகுதி உள்ளது. இங்கு நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைமுகமாக அத்துமீறி உள்ளே வந்து, வீரர்கள் தங்கியருந்த இடத்தில் கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கி தாக்குதல்களையும் நடத்தினர்.

இதே போல், ரஜோரி மாவட்டத்திலும் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், திடீரென்று தாக்குதல் நடத்தினர். இதைக்கண்டு சுதாரித்துக் கொண்ட இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.

ஆனால், பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய நடத்திய தாக்குதலில் கேப்டன் கபில் குண்டு என்ற ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட ராமவதார், சுபம் சிங், ரோஷன் லால் என மொத்தம் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்