முக்கிய செய்திகள்

பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன்…

கொல்கத்தாவில் நடைபெற்ற 17 வயதுக்குட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – ஸ்பெயின் அணிகள் இன்று மோதின. இதில் ஸ்பெயின் அணியை 5 – 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த தொடர், கடந்த 6ம் தேதி கோலாகலமாகத் தொடங்கி டெல்லி, கவுகாத்தி, கொல்கத்தா, நவி மும்பை, கோவா, கொச்சி ஆகிய 6 நகரங்களில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.