முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி மனைவி சென்ற கார் விபத்து : அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தார்..


ராஜஸ்தானில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி ஜஷோதாபென் காயம் அடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் அருகே பிரதமர் மோடியின் மனைவி ஜஷோதா பென் இன்று இன்னோவா காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது டிரக்குடன் மோதிய விபத்தில் ஜஷோதா பென் காயம் அடைந்தார். பாராவில் உள்ள அட்ரு என்ற இடத்தில் இருந்து உதய்பூர் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இன்று காலை 10 மணிக்கு ஏற்பட்டது. டிரக் ஓட்டுநர் பிரேக் போட்டத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது

கார் டிரைவர் பசந்த் அதே இடத்தில் பலியானார். காயம் அடைந்த மோடியின் மனைவி, மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு கமாண்டோ ஒருவர் உடனடியாக அருகில் இருக்கும் சித்தோர்கர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜசோதாபென்னுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கமாண்டோ வீரர் ஆபத்தான கட்டடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.