பிரதமர் நரேந்திரமோடி கேதார்நாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். புகழ்பெற்ற கேதார்நாத் ஆலயம், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏப்ரல் முதல் நவம்பர் வரையே திறந்திருக்கும் இந்தக் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் வழிபாடு மேற்கொண்டார்.
இந்நிலையில் இந்தக் கோவிலில் பிரதமர் மோடி மீண்டும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
