முக்கிய செய்திகள்

புரட்சியாளராக அவதாரமெடுக்கும் காதல் தேசம் தபு!

காதல் தேசம் தபுவை நினைவிருக்கிறதா… நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த அவர் தற்போது தெலுங்குப் படத்தில் புரட்சியாளர் வேடத்தில் நடிக்கிறார்.

தமிழில் கடைசியாக விக்ரம், ஜீவா நடித்திருந்த ‘டேவிட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது அவர் இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். ஏற்கனவே திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘ஏஏ19’ திரைப்படத்தில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்துவருகிறார் தபு.

தற்போது, நடிகர் ராணா மற்றும் சாய்பல்லவி முதன்மை வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ஒன்றிலும் கமிட் ஆகியிருக்கிறார் தபு. வேணு உடுகுலா இயக்கும் இத்திரைப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது. 

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இதில் தபு, சமூக ஆர்வலராக, ம்க்களுக்காக போராடும் பேராசிரியர் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். எனினும், முறையாக இன்னும் அவர் இதுகுறித்து தகவல்களை வெளியிடவில்லை. இத்திரைப்படத்தில் நடிகர் ராணா காவல்துறை அதிகாரியாகவும், நடிகை சாய்பல்லவி நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவராகவும் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.