முக்கிய செய்திகள்

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் : பிப் 3-ம் தேதி திமுக அமைதிப் பேரணி ..

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் திமுக அமைதிப் பேரணி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி -3ம் தேதி காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி நடைபெறும்.

மேலும் அமைதிப் பேரணியில் திமுக-வினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்க சென்னை மாவட்ட திமுக அழைப்பு விடுத்துள்ளது..