முக்கிய செய்திகள்

பொது இடங்களில் வை-பை பயன்படுத்தினால் சைபர் தாக்குதல்: மத்திய அரசு எச்சரிக்கை..

பொது இடங்களில் வை-பை பயன்படுத்தினால் சைபர் தாக்குதலுக்கு ஆளாகக் கூடும் என்று மத்திய அரசின் தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இலவசமாகக் கிடைக்கும் வை-பை யை பொதுமக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய அரசின் ஏஜென்சியான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கணினித்துறை சார்ந்த பாதுகாப்புக்கான இந்த ஏஜென்சி இந்தியாவில் வை-பை மூலம் சைபர் தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *