முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு முதல் செமஸ்டர் தேர்வில் 31% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி: அண்ணா பல்கலைக்கழகம்


பொறியியல் படிப்புகளில் முதல் செமஸ்டர் தேர்வில், வெறும் 31 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தேர்வெழுதிய 1,13,298 மாணவர்களில் 36,179 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.