முக்கிய செய்திகள்

போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதால் கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை..

மறைமலைநகரில் ரயில் முன் பாய்ந்து கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் என்பவர் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கான வீடியோ பதிவில், ”பாடியில் ”நோ பார்கிங்” பகுதியில் கால் டாக்சியை நிறுத்தி இருந்தேன். அதற்கு தகாத கெட்ட வார்த்தைகளில் போலீசார் என்னை திட்டினர்.

இவர்களது தொடர் அவமானத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து காவல் துறை உதவி ஆணையர் விஜய குமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறவுள்ளது.