மக்கள் மணலை தவிர்த்து எம்.சாண்டை அதிக அளவில் பயன்படுத்துமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி கேள்விக்கு பதில் அளித்த அவர், மணல் விற்பனை தனியார் யாருக்கும் கொடுக்கப்படவில்லை என்றும்,
வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டு சென்னையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவதாகவும் கூறினார்.
நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளால் போதுமான அளவு அரசால் மணல் குவாரிகள் அமைக்க முடியவில்லை என்றும் அதுவே மணல் விலை உயர்விற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
மணலுக்கு மாற்றாக அரசின் சார்பில் எம்.சாண்ட் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர்,
படிப்படியாக மணலின் பயன்பாட்டை குறைப்பதுதான் அரசின் நோக்கம் என்றும் மணலைத் தவிர்த்து எம்.சாண்டை அதிகமாக மக்கள் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.