முக்கிய செய்திகள்

மருத்துவமனையில் அம்மாவை நானோ, மற்ற அமைச்சர்களோ பார்க்க அனுமதிக்கவில்லை..


ஜெயலலிதாவை பார்க்க எங்களை ஏன் அனுமதிக்கவில்லை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும் என்று எங்களை பயமுறுத்தி ஜெயலலிதாவை பார்க்கவிடவில்லை என்றும், நானோ, மற்ற அமைச்சர்களோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
டிடிவி தினகரன் ஒரு மாயமான் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவில் டிடிவி தினகரனை விட நான் 18 ஆண்டுகள் சீனியர் என்று தெரிவித்த ஓபிஎஸ், பொய் சொல்லி ஏமாற்றி வருபவர் தான் டிடிவி தினகரன் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம் என்று ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்துள்ளார். ரூ.20 நோட்டை வைத்துக்கொண்டு டி.டி.வி வீட்டு வாசலில் மக்கள் காத்திருக்கின்றனர் என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். மேலும் டிடிவி தினகரன் ஒரு மாயமான் என்று ஓ பன்னீர் செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.