முக்கிய செய்திகள்

மறைந்த அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்த மதுரை வருகை..


மறைந்த எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் உடலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் இன்று நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார்.

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ஜீவா நகர் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸிற்கு நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் தற்போது பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏ.கே.போஸ் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதியம் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.

அவருடன் தமிழக அமைச்சர்கள், எம்,எல்.ஏக்களும், அஞ்சலி செலுத்த வரவுள்ளனர்.
அதை தொடர்ந்து மாலை ஏ.கே. போஸின் வீட்டில் இறுதிச் சடங்கு நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.