முக்கிய செய்திகள்

மூன்று வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு : டிச.,26 ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..

மூன்று வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது.

தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை இணைப்பதற்கு அந்த மன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என மும்பையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது.

இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வெங்கடாச்சலம், இந்த தகவலை வெளியிட்டார்.