முக்கிய செய்திகள்

மெரீனாவில் கலைஞருக்கு இடம் தர தமிழக அரசு மறுப்பு!

 

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞருக்கு இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் தருவதாக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சட்டச்சிக்கல் இருப்பதால் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்று தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். திமுக கோரிக்கையை நிராகரித்து எடப்பாடி பழனிசாமி அரசு விளக்கம் அளித்துள்ளது. அண்ணா நினைவிடம் அருகே கலைஞரை அடக்கம் செய்ய திமுக இடம் கேட்டது. வழக்குகளை காரணம் காட்டி கலைஞருக்கு இடம் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்கு உடலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கலைஞருக்கு தேசியக் கொடி போர்த்தி முழு அரசு மரியாதை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.