முக்கிய செய்திகள்

மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ்..

மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தில் கூறியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அசாம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதம் ஏந்தி போராடும் குழுக்கள் ஆதிக்கம் உள்ளன. இவர்களை ஓடுக்கவும், தற்காப்புக்காக சுட்டுக்கொல்லவும் ,துணை ராணுவம் மற்றும் போலீசாருக்கு அதிகாரம் வழங்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது.

இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், மேகலாவில் கடந்த 31-3-2018 முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் முற்றிலுமாக வாபஸ் பெற்றப்பட்டுள்ளது.

அருணாச்சலப்பிரதேசத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் உள்ள 16 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமலில் இருந்த இந்த சட்டம் 8 காவல் நிலைய எல்லைகளுக்குள் மட்டும் அமலில் இருக்கும்.. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.