முக்கிய செய்திகள்

யுகாதி திருநாள் : பிரதமர் மோடி டுவீட்டரில் வாழ்த்து..


கன்னட மற்றும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, டுவீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இனிய, மகிழ்ச்சிகரமான யுகாதி திருநாள் வாழ்த்துக்கள், இத்திருநாளை கொண்டாடும் மக்களுக்கு குறைவில்லா மகிழ்ச்சியையும், நல்ல உடல்நலத்தையும் பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்வதாக, மோடி தனது டுவீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரும் மக்களுக்கு யுகாதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.