ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை : ராகுல் காந்தி வலியுறுத்தல்..

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் எம்.எல்.சர்மா, வக்கீல் வினீத் தண்டா, ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதன்பின், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது.

ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான். அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அத்துடன் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரபேல் விவகாரம் தொடர்பான கேள்விக்கு நிர்மலா சீதாராமன் மற்றும் அருண் ஜெட்லி மட்டுமே பதிலளித்து வருகின்றனர். மோடி இதுகுறித்து மவுனமாகவே உள்ளார்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமரும், மத்திய அமைச்சர்களும் மறுப்பு தெரிவிப்பது ஏன்? சிஏஜி அறிக்கை குறித்து அரசு எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை?: அறுதியிட்டு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே…

Recent Posts