முக்கிய செய்திகள்

லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ விடுவிப்பு..


தென்கொரிய நாட்டின் முன்னாள் அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சாம்சங் துணைத் தலைவர் ஜே ஓய் லீ விடுவிக்கப்பட்டிருக்கிறார். தென் கொரியா வின் மேல் முறையீட்டு நீதிமன் றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. லீக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறை தண்டனையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் நாட்டின் மிக முக்கியமான நிறுவனத்தை மாற்றியமைக்கும் திறன் அரசுக்கு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் லீயின் தண்டணைக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து பாதியாக குறைத்து, இரண்டரை ஆண்டுகளாக மாற்றியுள்ளது. லீ ஏற்கெனவே ஓர் ஆண்டாக சிறையில் இருந்து வருகிறார்.

ஜே ஒய் லீ மீது லஞ்ச, ஊழல் மோசடி வழக்குகளில் கடந்த ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டது. சாம்சங் குழுமத் தலைவர் உள்ளிட்ட நான்கு முக்கிய தலைவர்கள் மீது மோசடி, திட்டமிட்ட ஊழல் வழக்குகள், தென் கொரிய அதிபராக இருந்த பார்க் குய்ன் ஹைக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனால் கடந்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி லீ கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தென் கொரிய அதிபரும் சிறை தண்டனை பெற்றிருக்கிறார்.

ஜே ஒய் லீ சாம்சங் குழுமத்தின் மூன்றாம் தலைமுறை தலைவராவார். இவரது தந்தை லீ குன் ஹீ-க்கு வயதானதைத் தொடர்ந்து குழும நிறுவனங்களுக்கு இவர் தலைமை ஏற்றார். கொரியாவின் மிகுந்த வசதி படைத்த குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்றாகும். ஆனால் சிறையிலிருந்து வெளிவந்ததும் உடனடியாக நிறுவன பொறு ப்பை ஏற்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியா கவில்லை.