முக்கிய செய்திகள்

லண்டனில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்..


தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி லண்டனில் அதன் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டு முன்பாக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். வேதாந்தா குழுமங்களுக்கு சொந்தமானது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

ஜல்லிக்கட்டுப் புரட்சியைப் போல வெகுண்டெழுந்துள்ளனர் தூத்துக்குடி மக்கள். இந்த போராட்டங்களுக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

லண்டனில் உள்ள வேதாந்த குழும உரிமையாளர் அனில் அகர்வால் வீடு முன்பாக தமிழர்கள் பறையடித்து போராட்டம் நடத்தினர். இதில் மனித உரிமை ஆர்வலர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் டி.டி.வி. தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.