முக்கிய செய்திகள்

வடகடலோர மாவட்டங்களில் மீண்டும் பருவமழை தொடங்கியது..


சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பருவமழை மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காலையிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை கனமழையாக நீடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது போல் புதுச்சேரி,கடலுார், நாகை, காரைக்காலில் மீண்டும் மழை தொடர்கிறது.