
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ஆலோசனை கூட்டத்தில் வருவாய்த்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்