முக்கிய செய்திகள்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் மீண்டும் சந்திப்பு: ட்ரம்ப் தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன்-ஐ இம்மாத இறுதியில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

பரம எதிரிகளாக இருந்த அமெரிக்கா – வடகொரியா இடையே கடந்த ஆண்டு நட்பு மலர்ந்தது. இதனை அடுத்து டிரம்ப் – கிம் ஜாங் உன் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து வட கொரியா – அமெரிக்கா இடையிலான நட்பு மேலும் வலுவானது. கிம் ஜோங் உன்னை மீண்டும் சந்தித்து பேச உள்ளதாக டிரம்ப் கூறி வந்தார்.

இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில்,  வியட்நாமில் வருகிற 27 மற்றும் 28ம் தேதிகளில் டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெற உள்ளது.

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் இந்த மாதத்தில் இரண்டாவது அணுஆயுத மாநாடு நடத்தவுள்ளதாக தனது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

”மகத்துவத்தை தேர்வு செய்தல்” (Choosing Greatness) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு தான் ஆற்றிய உரையில் , எல்லை சுவர் கட்டுவது தொடர்பாக மீண்டும் ட்ரம்ப் வலியுறுத்தினார்.

இதற்கிடையே இது குறித்த ஒரு மறுதலிப்பில் அமெரிக்காவின் மதிப்புகள் மற்றும் மாண்புகளை டிரம்ப் கைவிடுவதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் நடந்த மிக நீண்ட அரசாங்க பணிநிறுத்தத்தை தொடர்ந்து டிரம்ப்பின் இந்த முதன்மையான பேச்சு வெளிவந்துள்ளது.