முக்கிய செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவு…

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்.

.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராதாமணி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராதாமணி திமுகவின் விழுப்புரம் மத்திய, மாவட்ட அவைத்தலைவராகவும் இருந்தார்.

2016ம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு ராதாமணி வெற்றி பெற்றார்.