முக்கிய செய்திகள்

வேலூர் அஞ்சலிக் கூட்டத்தில் கதறி அழுத துரைமுருகன்!

வேலூரில் திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியின்போதும் செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

வேலூர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலமும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஊர்வலத்தின் நிறைவில் மேடையில் நின்று மக்களிடையே பேச முயன்ற துரைமுருகன், கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போதும் துக்கம் தாளாமல் அவர் கண்ணீர் விட்டபடியே பேசினார்.

நன்றி:  மொபைல் ஜர்னலிஸ்ட்