முக்கிய செய்திகள்

வைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்!

வேலை அலுப்புக்காக கேரள ரப்பர் தோட்ட கூலித் தொழிலாளி பாடிய பாடல் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. நண்பர்களின் வற்புறுத்தலால் அவர் பாடிய பாடல் சமூக வலைத் தளங்களில் சக்கை போடு போடத் தொடங்கியது. பாட்டைக் கேட்ட சங்கர் மகாதேவன், என்ன குரல், என்ன இனிமை என வியந்து ட்விட்டரில் புகழ்ந்து தள்ளி இருந்தார். இவரை எப்படி பார்ப்பது… இவரை சந்திப்பதுடன் சேர்ந்து பணிபுரிய ஆவலாக உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். நடிகர் கமலஹாசனும் இதேபோல் தெரிவித்திருந்தார். ஒரு வழியாக, கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த ராகேஷ் என்பது தெரிய வர, சங்கர் மகாதேவன் அவரைத் தொடர்பு கொண்டு பேசியும் விட்டார். இனி ராகே ஷுக்கு எல்லாம் சுபமே! இதோ அவரை புகழின் உச்சிக்கு கொண்டு்சென்ற பாடலும், அவரே கூறும் விளக்கங்களும்…