அமராவதியில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவேன்: சந்திரபாபு நாயுடு

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு இல்லையா என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பி உள்ளார். “ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சியை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவேன். ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை விளையாட்டு போட்டிகளுக்கான முக்கிய மையமாக உருவாக்குவோம். அமராவதியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திக் காட்ட முடியும்” என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவின் புதிய தலைநகராக ஆந்திராவை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வரும் தெலுங்கு தேசம் கட்சி, தங்களது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அண்மையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. அது தோல்வியில் முடிந்தது.