அயோத்தி வழக்கில் தீர்ப்பு: சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி…

70 ஆண்டுகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள அயோச்த்தி வழக்கின் தீர்ப்பை தற்போது உச்சநிதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்து வருகிறார்.

வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்ரை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி,

இஸ்லாமியருக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவு.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சன்னி வக்ஃபு வாரியத்துக்கு மாற்று ஏற்பாடாக 5 ஏக்கர் நிலம் வழங்க ஆணை வழங்கியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

ராமஜன்மபூமி நியாஸ் என்ற அமைப்பிடம் அயோத்தி நிலத்தை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

 

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: பிரியங்கா காந்தி வேண்டுகோள்

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: சன்னி வக்ஃப் வாரியம்

Recent Posts