அரசு பள்ளிகளில் 19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை..

தமிழகத்தில் 19 ஆயிரத்து 426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில்

ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2 ஆயிரத்து 279 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 17 ஆயிரத்து 147 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்.

மேலும், ஜூலை 9-ல் தொடங்க உள்ள கலந்தாய்வில் உபரி ஆசிரியர்களுக்கு அவரவர் பணியாற்றும் மாவட்டத்துக்குள்ளேயே கட்டாய பணி மாறுதல் வழங்கி ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் பணியமர்த்தவும் உத்தரவிட்டுள்ளது.