ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்காக அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூடியுள்ளது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், பா.வளர்மதி உள்ளிட்ட ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களில் பேர் பங்கேற்றுள்ளனர். ஜஸ்டின் செல்வராஜ் மட்டும் உடல்நலக் குறைவால் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
