இந்தியாவில்24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கரோனா தொற்று…

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 97,497 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்தது.
மொத்த பாதிப்பு 62,25,764 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 80,472 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,179 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97,497 ஆக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு…

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு: பாஜக நிர்வாகி கைது

Recent Posts