
இந்திய அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான அரிசி கிடைக்கவில்லை, பற்றாக்குறை நீடிப்பதால் அமெரிக்காவில் இந்தியர்கள் அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அரிசி தட்டுப்பாட்டை நீக்க அமெரிக்க அரசு பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.